மதுரை,
திமுக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் உடல்நலக்குறைவினால் நேற்று இரவு மதுரையில் காலமானார். அவருக்கு வயது 78.
மதுரை ஹெய்ஹிந்துபுரம் ஜீவாநகரில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கல்லீரல் பாதிக்கப்பட்டு, மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள மித்ரா தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்ததார். சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த தி.மு.க.வின் பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம், நேற்று திடீரென  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது,  திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டடு, கண் சொருகியதாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், அங்கு ஆறுமுகத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
1arumugam
தமிழக தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் பேச்சாளர்  ஆறுமுகம். அவருக்கு  தீப்பொறி என்ற அடை மொழியை வழங்கியவர் அறிஞர் அண்ணா.
தனது அபரீதமான பேச்சாற்றலால் அதிமுக, திமுக தொண்டர்களை கிட்டதட்ட 40 ஆண்டுகளாக கட்டிப்போட்ட வர்  தீப்பொறி ஆறுமுகம். திமுக சார்பாக உதிர்த்த இவரது பொறி பறக்கும் பேச்சால்தான் இந்த அடைமொழி அவருக்கு கிடைத்தது.
எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் தாக்கி இவரைப் போல கடுமையாக விமர்சித்தவர்கள் யாரும் இல்லை. அந்த அளவுக்கு சூடு பறக்கப் பேசியவர் தீப்பொறி ஆறுமுகம். இவரது கூட்டங்களுக்கு பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் வருவார்கள். அந்த அளவுக்கு இவரது பேச்சில் இரட்டை அர்த்தங்கள் அதிகம்.
பச்சை பச்சையாக பேசும் தீப்பொறி ஆறுமுகம், தான் கூட்டங்களில் பேசத் தொடங்குவதற்கு முன்பு பெண்களை போகச் சொல்லி விடுவார். அந்த அளவுக்கு அவரது பேச்சில் ஆபாச அனல் பறக்கும்.
இடையில், உடல்நலம் இல்லாமல் இருந்தபோது,  கடந்த 2001 ம் ஆண்டு கருணாநிதியிடம் மருத்துவ உதவி கேட்டு அது கிடைக்காமல்போனதால் விரக்தியில்  அதிமுகவில் இணைந்தார்.
அவருக்கு மருத்துவ செலவுக்காக  ரூ. 5 லட்சம் நிதியுதவி கொடுத்து அதிமுகவுக்கு இழுத்துக் கொண்டவர் ஜெயலலிதா. அதிமுகவில் தலைமைக்கழக பேச்சாளராக வலம் வந்த தீப்பொறி ஆறுமுகம், சில காலம் திமுகவையும் வசை பாடினார்.
2arumugam
பின்னர் 2010ல் மதுரையில் மு.க.அழகிரியை சந்தித்து தன்னை மீண்டும் திமுகவில் இணைத்துக் கொண்டார் தீப்பொறி ஆறுமுகம்.
1970களில் திமுகவின் முன்னணி பேச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்து, நீண்ட காலமாக திமுகவின் தலைமைக் கழக பேச்சாளராக இருந்தார். தீப்பொறி ஆறுமுகத்திற்கு மனைவி, மகன், மகள் உண்டு.
அரசியலில் இத்தனை பிரபலமான ஆறுமுகத்திற்கு, தனது ஒரே மகனுக்கு அரசு வேலை வாங்கிக்கொடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் கடைசி வரை இருந்தது.
மக்கள் செய்தி தொடர்பு துறையில் உதவி அதிகாரி ( ஏ.பி.ஆர்.ஓ.) பணி ஆறுமுகம் மகனுக்கு கலைஞர் மூலமாக கிடைத்துள்ளது. ஆனால் அந்த பதவியும் சிலரின் அதிகாரத்தால் வேறொருவருக்கு மாற்றப்பட்டு விட்டது.
இந்த ஆதங்கத்தை சுமந்த ஆறுமுகம் கடைசிவரை பலரிடமும் புலம்பிக்கொண்டே வந்துள்ளார்.