“ஏரி, குளங்களை சமூகவிரோதிகள், அரசு அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமித்துவிட்டார்கள். அதன் விளைவாகத்தான் மழை நீர் வடிய வழியின்றி வெள்ள சேதம் ஏற்படுகிறது. மக்களின் உயிரும் உடமையும் பறிபோகின்றன” என்கிற குற்றச்சாட்டு பலமாக எழுந்திருக்கிற நேரம் இது.
ஆனால் பல இடங்களில் அரசே, நீர்நிலைகளை ஆக்கிரமித்திருக்கிறது என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் இப்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன்.
இதற்கு ஒரு துளி பதமாக சொல்ல வேண்டுமென்றால், தாம்பரம் பகுதியில் உள்ள கன்னடபாளையம் – கிஷ்கிந்தா சாலை.
இங்கே ஓடிய பாப்பான் கால்வாயை மூடி நெடுஞ்சாலை துறை, சாலை அமைத்ததுவிட்டது. அதனால்தான் மழை நீர் வழிய வாய்ப்பின்றி, பெரும் வெள்ளத்தால் மக்கள் துயருற்றார்கள்.
இப்படி அரசே, ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் என்ன செய்வது?
சாலையில் ரெகுலராக படகு போக்குவரத்து துவங்கச் சொல்ல வேண்டியதுதான்.. வேறென்ன செய்வது?