தான் எடுத்த முடிவுகளில் மிகத் தவறான முடிவு, ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்ததும், விஜயகாந்தை முதல்வராக ஏற்றதும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
ஆனந்த விகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் வைகோ சொல்லியதில் இருந்து:
“அரசியலில் முட்டாள்த்தனமான முடிவுகள் எடுத்திருக்கிறேன். அதைச் சொல்வதில் தவறில்லை.”
“நான் எடுத்த முடிவுகளில் மிகத் தவறான முடிவு ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தது. என்னை ஜெயில்ல வைத்த ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்ததால் என் கிரிடிபிலிட்டி நொறுங்கி போய் போய்விட்டது. நம்பகத்தன்மை தரைமட்டமாயிடுச்சு!”
“விஜயகாந்தை முதல்வராக ஏற்றுக்கொண்டதால் என் இமேஜ் போய்விட்டது உண்மை.!”
“கலைஞருக்கு மிக விசுவாசமாக இருந்தேன். அவர் மேல தூசிகூட பட விடமாட்டேன். எனக்கு திருமணம் ஆன புதிது. என் மனைவியின் உறவினர்கள் பலர்,காங்கிரஸ்காரர்கள். அவர்கள், கருணைநிதி என்று சொன்னபோது கொதித்துப்போய்விட்டான். “ கலைஞர் என்று சொல்லுங்கள்” என்றேன்.”
விகடன் பேட்டியின் லிங்க்: (நன்றி: விகடன்)