விசாகப்பட்டினம்,
இந்தியா- நியூசிலாந்து இடையே இன்று நடைபெற்ற கடைசி ஒரு நாள் போட்டியில் அமித்மிஸ்ராவின் அதிரடி பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சுருண்டது. இதனால் 190 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்தியா தொடரை கைப்பற்றியது.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடருக்கான கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
இன்றைய கடைசி 5வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியை 79 ரன்னில் மடக்கி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
இந்திய அணியில் பும்ரா மீண்டும் சேர்க்கப்பட்டார். அறிமுக வீரராக ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டார். இதேபோல் நியூசிலாந்து அணியில் ஆண்டர்சன் இடம் பெற்றார்.
முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோனி பேட்டிங் தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்களாக ரகானே மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கி னார்கள். ஸ்கோர் 9.2 ஓவரில் 40 ரன்களாக இருக்கும்போது இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது.
ரகானே 20 ரன்கள் எடுத்த நிலையில் நீசம் பந்தில் லாதமிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து ரோகித் சர்மாவுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். மெதுவாக ஆட்டத்தை தொடங்கிய ரோகித் சர்மா, நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடத் தொடங்கினார். அவர் 49 பந்தில் அரை சதம் அடித்தார். இதன் காரணமாக இந்தியா 18.3 ஓவரில் 100 ரன்களை தொட்டது.
இந்திய அணியின் 22 ஓவரில் 119 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 70 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் 65 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார்.
அடுத்து 3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் டோனி ஜோடி சேர்ந்தார். விராட்கோலி – தோனி ஜோடி விறுவிறுப்பில்லாமல் விளையாடியது. இதன் காரணமாக ரசிகர்கள் சோர்வடைந்தனர். 29 ஓவர்கள் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது.
இந்திய கேப்டன் டோனி நியூசிலாந்து பவுலர் சான்ட்ர் பந்துவீச்சில் 41 ரன்னில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். விராட்கோலி 65வது ரன்னில் இஷ் சோதியின் பந்துவீச்சில் குப்டிலிடம் பந்தை பறி கொடுத்தார்.
அடுத்து களம் இறங்கிய மணிஷ்பான்டேவும் ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து கேசர் யாதவ், அக்சர் பட்டேல் ஜோடி ஆடியவது. அக்சர் பட்டேலும் 24 ரன்குக்கு போல்ட் ஆனார். அதையடுத்து ஜெயந்த் யாதவ் மட்டையை பிடித்ததார்.
இறுதியில் இந்திய அணி 50 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 23.1 ஓவர்களில் 79 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவியது.
இந்திய அணி சார்ப்பில் அமித் மிஸ்ரா 5 விக்கெட்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார்.
அமித்மிஸ்ரா பத்துவீச்சில் ராஷ்டெய்லர் 19 ரன்னில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து ஜேம்ஸ் நீசம் 3ரன்னில் பவுல்டு ஆனார். பீஜே வாட்லிங் 0 ரன்னில் டக் அவுட் ஆனார்.
டிம்சோதியும் டோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு அவுட் ஆனார். இஷ்சோதியின் பந்து ரகானேயின் கையில் மாட்டியது.
இதன் காரணமாக அமித்மிஸ்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மேன் ஆப் தி மேட்ச் ஆக தேர்வானார். அதேபோல் சீரிஸ் ஆப் தி மேட்ச் ஆகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒரு நாள் தொடரை 3 – 2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.