டாடா நிறுவனத்திலிருந்து உரிய காரணம் எதுவும் சரியாக தெரிவிக்கப்படாமல் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதன் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி இனி அந்நிறுவனத்தின் டாட்டா சன்ஸ் குழுவின் உறுப்னராக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவரது பதவி “நான் – எக்ஸிகியூட்டிவ் டைரக்டர்” என்று மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இவரால் இப்பதவியில் இருந்து கொண்டு திட்டமிடல் மற்றும் கொள்கை வரையறுப்பு போன்ற செயல்கள் மட்டுமே செய்ய இயலும்.

cyrus_mistry

கடந்த திங்கள் வரை சைரஸ் மிஸ்ட்ரி டாட்டா நிறுவனத்தின் எக்ஸிகியூட்டிவ் சேர்மேனாக இருந்தார். மார்ச் 2016 வரை அவர் டாட்டா சன்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.17.6 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார். இதில் அவரது மொத்த சம்பளம் 5.6 கோடி மற்றும் கமிஷன் ரூ.11 கோடி.
நான்-எக்ஸிகியூட்டிவ் டைரக்டராக இனி அவர் 1.3 கோடி முதல் 1.5 கோடி வரை சம்பளமாகப் பெறுவார்.