ஜம்மு: சீன எல்லையை ஒட்டிய பகுதிகளில் இந்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 100 வீராங்கனைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்திய ராணுவத்தில் பெண்களுக்கும் அனைத்து பிரிவுகளிலும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பாதுகாப்பு வீராங்கனைகளுக்கு 44 வாரங்களில், போர் பயிற்சி, ஆயுதங்கள் கையாளும் விதம், மலையேற்றம் உள்ளிட்டவை குறித்து பயிற்சி தரப்பட்டது.
பயிற்சிக்கு பிறகு அவர்கள் ஜம்மு காஷ்மீரின் இந்திய-திபெத் எல்லையிலும், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சீன எல்லையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய வீராங்கனைகள் 8,000 முதல் 14,000 அடி உயரம் வரை உள்ள பகுதிகளில் பணியில் ஈடுபட்டுள்ளனர். மோசமான வானிலை, கடுமையான மலைப்பகுதியில் இவர்கள் தீரத்துடன் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.