சென்னை,
ரவக்குறிச்சியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் நேட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட செந்தில் பாலாஜியும், திமுக வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கே.சி.பழனிச்சாமியும் தற்போதும் வேட்பாளர்களாகவே அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த மே மாதம்  நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடந்ததாக கூறி தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.

இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் செந்தில் பாலாஜியும், திமுக சார்பில் கே.சி.பழனிச்சாமியும் போட்டி யிட்டனர். தற்போது, 6 மாதங்களுக்குப் பிறகு அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து,அரவக்குறிச்சி தொகுதிக்குட்ட அய்யம்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர்  சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

கே,சி,பழனிச்சாமி
கே,சி,பழனிச்சாமி

அதில், அரவக்குறிச்சி தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் அங்கு இடை தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆனால், கடந்த முறை வேட்பாளர்களால் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டு, தேர்தல் ரத்து செய்யப்பட்ட அந்த தொகுதியில், அதே வேட்பாளர்களை அதிமுக, திமுக கட்சிகள் மீண்டும் அறிவித்து உள்ளது.  இதனால், இந்த தொகுதியில் 2 பேரும் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கவுல் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக திமுக, அதிமுக கட்சிகளுக்கும், அரவக்குறிச்சி வேட்பாளர்கள் செந்தில்பாலாஜி, கே.சி.பழனிச்சாமி மற்றும் தமிழக தேர்தல் ஆணையரும் 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை நவம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.