ஸ்ரீநகர்,
ன்முறையில் ஈடுபட்டு வரும்,  தடம் மாறிய காஷ்மீர் இளைஞர்களை சுட்டுத் தள்ளாமல் மீட்டு தாருங்கள் என்று காஷ்மீர் போலீஸாருக்கு மெகபூபா முப்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பயங்கரவாத அமைப்புகளில் சேர, வீடுகளை விட்டு வெளியேறிய காஷ்மீர் இளைஞர்களை மீட்டு, சமூகத்தின் மைய நீரோட்டத்துக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும்’ என, காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
mega
ஸ்ரீநகர் அருகே ஸிவானில் ஆயுதப் படை காவல்துறை வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மெகபூபா முப்தி கலந்துகொண்டு பேசியதாவது:
காஷ்மீர் பையன்கள் பலர் தீவிரவாத அமைப்புகளில் சேருவதற்காக வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர்.  அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேர விரும்புகின்றனர்.  அவர்கள் எல்லோரும் உள்ளூர் இளைஞர்கள்.
அவர்களை என் கவுன்ட்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்வதற்கு பதிலாக, சாத்தியமானால் அவர்களை  பிடித்து மீட்டு தாருங்கள். அவர்களை நல்வழிப்படுத்தி  அவரவர் வீட்டுக்கு மீண்டும் அனுப்பிவைப்பதற்கான முயற்சி களை காவல்துறை மேற்கொள்ள வேண்டும்.
megapaupa
துப்பாக்கிகளுக்குப் பதிலாக, அந்த இளைஞர்களிடம் விளையாட மட்டைகளும், பந்தும் அளித்து, நல்ல கல்வியைப் புகட்டி சமூகத்தின் மைய நீரோட்டத்துக்கு அவர்களைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
இப்படிப்பட்ட இளைஞர்களை வழிநடத்திச் செல்ல ஒரு கரம் வேண்டும். துப்பாக்கி முனையிலும், கற்கள் மற்றும் லத்தியைக் காட்டி யாரையும் அடிபணிய வைக்க முடியாது. ஆயுதப்படை சிறப்பு அதிகாரங் கள் சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் என்பதும் ஏற்கத் தக்கதே.
ஆனால் அதற்கு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு, அமைதி திரும்பியாக வேண்டியது அவசியம். எனவே, சூழ்நிலையை மாற்ற இளைஞர்கள் ஒத்துழைத்தால், கறுப்புச் சட்டங்கள் அகற்றப்படும்.
இவ்வாறு மெகபூபா முப்தி பேசினார்.