சென்னை,
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டிய தமிழ் திரையுலகம் சார்பில் 2 நாட்கள் யாகம், பூஜை , பிரார்தனைகள் நடைபெற்று வருகிறது.
கடந்த ஒரு மாதமாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா விரைவில் நலம்பெற வேண்டிய அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்தி வருகிறார்கள்.
இதற்கிடையில், முதல்வர் நலம் பெற வேண்டிய அவரது கட்சியினர் தமிழகம் முழுவதும் மன்டுமின்றி இந்தியா முழுவதும் முக்கியமான கோயில்களில் விசேஷ பிரார்த்தன செய்து வருகின்றனர்.
இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் என மதமாச்சரியமின்றி அவர் நலம்பெற வேண்டிcie-field பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது.
 
இதையொட்டி தமிழ் திரைப்படத்துறையினரும் 2 நாட்கள் விசேஷ பூஜை மற்றும் பிரார்த்தனைகள் செய்கிறார்கள்.  சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் நேற்று காலை தொடங்கியது.
திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் சி.கல்யாண் ஏற்பாட்டில், இந்த சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
30 சிவன் கோவில்களில் இருந்து வந்திருந்த 30 சிவாச்சாரியார்கள் நடத்தினார்கள். 2 லட்சத்து 25 ஆயிரம் வேத மந்திரங்களை ஓதி விசேஷ பூஜையை அவர்கள் செய்தனர்.
இந்த சிறப்பு பிரார்த்தைனையில்,  நடிகர் சங்க தலைவர் நாசர், தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.தாணு, நிர்வாகிகள் டி.சிவா, கதிரேசன், டி.ஜி.தியாகராஜன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கங்காராஜ், மற்றும் கரகாட்ட பிரசாத், ஆனந்தா எல்.சுரேஷ், டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
நடிகர்கள் மனோபாலா, ரமேஷ் கண்ணா, பெப்சி சார்பில் செல்வராஜ், சந்திரன், கிரிசன், மற்றும் தயாரிப்பாளர்கள் சிவசக்திபாண்டியன், மைக்கேல் ராயப்பன், அருள்பதி, கோபாலதாஸ், சிவஸ்ரீ சீனிவாசன், ஆனந்தா எல்.சுரேஷ், ஜாகுவார் தங்கம் உள்பட திரையுலகை சேர்ந்த பலர் பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.
இன்றும் விசேஷ பூஜைகள்,  பிரார்த்தனைகள் நடைபெறுகிறது.