சென்னை,
தமிழகத்தில் நடைபெற இருக்கும் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக அறிவித்து உள்ளது.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை திமுக அறிவித்துள்ளது.
இதன்படி அரவக்குறிச்சியில் கே.சி.பழனிச்சாமி, தஞ்சாவூரில் அஞ்சுகம் பூபதி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன் ஆகியோரின் பெயர்களை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார். அஞ்சுகம் பூபதி மருத்துவ படிப்பும், சரவணன் புற்றுநோய் சிறப்பு மருத்துவராகவும் உள்ளனர்.
அரவக்குறிச்சியில் போட்டியிடும் கே.சி.பழனிச்சாமி ஏற்கனவே மே மாதம் அறிவிக்கப்பட்ட திமுக வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 19ம் தேர்தல் நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
கடந்த சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அதிக பணப்புழக்கம் மற்றும் பணப்பட்டுவாடா காரணமாக தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தேர்தல்கள் தள்ளிவைக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தலில் வெற்றி பெற்ற சீனிச்சாமி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கும் முன்பே மரணமடைந்ததை தொடர்ந்து திருப்பரங்குன்றம் தொகுடியும் காலியானது.
பிரதிநிதித்துவம் இல்லாத இம்மூன்று தொகுதிகளிகும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது
தமிழகத்தில் இந்த மூன்று தொகுதிகளுக்கும் நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19-ம் தேதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெயர்களை அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று திமுக வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.