முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் ஒரு முறை சொன்னார்:
”நான் படிக்கவில்லை என்று பலர் என்னிடம் கூறுகிறார்கள்.நான் எந்தச் சர்வகலாசாலையிலும் பயின்றாதாகச் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் எனக்குப் பூகோள சாஸ்திரம் நன்கு தெரியும்.தமிழ்நாட்டில் அநேகமாக எல்லாப் பகுதிகளையும் தெரியும்.
எங்கெல்லாம் நதிகள் இருக்கின்றன,எங்கெல்லாம் ஏரிகள் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியும்.
எந்த நாளில் நகரில் மக்கள் எம்மாதிரி தொழில் செய்து பிழைக்கிறார்கள் என்பதும் தெரியும்.
இவையெல்லாம் பூகோள சாஸ்திரமில்லை என்றால், நேர்கோடுகளையும் வளைந்த கோடுகளையும் கொண்டிருக்கும் புத்தகங்கள்தான் பூகோள சாஸ்திரம் என்றால் அது பற்றி நான் தெரிந்து கொள்ளாமலேயே இருந்து விடுகிறேன்” என்றர் காமராஜர்.
- அதனால்தான் அவரது ஆட்சியில் ஏராளமான நீர்நிலை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மழைக்காலத்துக்கு முன்பே, எந்தெந்த பகுதியில் வெள்ளம் வர வாய்ப்பு உண்டு, அதைத் தடுப்பது எப்படி என்று முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது.
- இதையும் மீறி எதிர்பாராமல் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் தானே நேரடியாக வெள்ள சேத பகுதிக்குச் சென்று அங்கு நிறைவேற்ற வேண்டிய நிவாரண பணிகளை பார்வையிடுவார்.
ஆம்.. அவர் மக்கள் முதல்வர்!
- அ.விசுவநாதன்