டில்லி,
மல்யுத்த வீரர் நார்சிங் யாதவ் ஊக்க மருந்து பிரச்சினையில் சி.பி.ஐ.வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்திய முன்னணி மல்யுத்த வீரர்களில் ஒருவர் நார்சிங் யாதவ். உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலக மல்யுத்த போட்டியில் 74 கிலோ உடல்எடை பிரீஸ்டைல் பிரிவில் கலந்துகொண்டு வெண்கலம் பதக்கம் வென்றார்.

ஆனால், இந்த ஆண்டு நடைபெற்ற பிரேசிலில் உள்ள ரியோடிஜெனீரோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தத்தில் ஆண்களுக்கான பிரீஸ்டைல் 74 கிலோ உடல் எடைப்பிரிவில் பங்கேற்க தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், போட்டிக்கு 20 நாட்களுக்கு முன்பு நார்சிங் யாதவ் ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார். இதனால் அவர் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த யாதவ், தான் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை தடுக்க சாய் பயிற்சி மையத்தில் உள்ள இருவர் தனது உணவு அல்லது தண்ணீரில் ஊக்க மருந்தை கலந்து இருக்கலாம் குற்றம் சாட்டினார்.
இந்த பிரச்சினை குறித்து அரியானா போலீஸ் வழக்கு பதிவு விசாரணை செய்தது.
இதற்கிடையில் நார்சிங் யாதவ் மீதான ஊக்க மருந்து சர்ச்சை குறித்து விசாரணை நடத்திய சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதித்தது.
இதனால் நார்சிங் யாதவ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் நாடு திரும்பினார்.
இதனால் மனம் உடைந்த நார்சிங் யாதவ், தான் ஊக்க மருந்து எதுவும் பயன்படுத்தவில்லை என்றும், நான் ஊக்க மருந்தில் சிக்கியதில் சதி இருக்கிறது. இது குறித்து சி.பி.ஐ.விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்துக்கு கோரிக்கை வைத்தார்.
இந்த பிரச்சினை குறித்து விரிவான விசாரணை நடத்த பிரதமர் அலுவலகம் சிபிஐக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
Patrikai.com official YouTube Channel