டில்லி,
மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை காவிரியில் இருந்து தினசரி 2,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி உயர்மட்ட தொழில்நுட்ப குழு அறிக்கை தாக்கல் செய்ததை அடுத்து உச்ச நீதி மன்றம் இன்று புதிய தீர்ப்பை வழங்கி உள்ளது.
காவிரியில் விநாடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தண்ணீர் விட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது
காவிரி விவகாரத்தில் 2 மாநிலங்களும் உச்சநீதிமன்ற உத்தரவை கண்டிப்பாக நடைமுறைபடுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிராக கர்நாடக முறையிட முடியாது என்று உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிராக முறையிட மாநில அரசுக்கு உரிமை இல்லை என்றும், நடுவர் மன்ற தீர்ப்பு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இணையானது என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
நதிநீர் பிரச்சினையில் நடுவர் மன்ற தீர்ப்பு இறுதியானது என்று மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் முகுல்ரோத்தகி தெரிவித்தார்.