சென்னை:
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் பார்ப்பதற்கு தனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும்,தான்தான் தவிர்த்ததாகவும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடலநலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் முதலமைச்சர் வகித்து வந்த துறைகள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யசாகர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில் முதல்வர் உடல்நலம் குறித்து ஆளுநர் ஏதும் குறிப்பிடவில்லை. முதலமைச்சரை சந்திப்பதற்கு தாம் மருத்துவமனைக்கு சென்றபோது, அவரை பார்க்க தனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அவரது உடல் நிலை கருதி சந்திப்பதை தவிர்த்துவிட்டதாகவும் ஆளுநர் வித்யாசாகர் அந்த அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.