tamilnadu759b

காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதால் சென்னையில் இன்னும்  நான்கைந்து நாட்களுக்கு  தொடர்ந்து மழை  இருக்கும்  என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும், வருகின்ற நாட்களில் எவ்வளவு மழை பொழியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 ஆம் தேதி சனிக்கிழமை – மேக மூட்டமாக காணப்படும்.

15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை – பரவலாக மழை பெய்யும். 30% மழைக்கு வாய்ப்பு உள்ளது.

16 ஆம் தேதி திங்கட்கிழமை – பலத்த மழை பெய்யும். 60% மழைக்கு வாய்ப்பு.

17 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை – பலத்த மழை பெய்யும். 80% மழைக்கு வாய்ப்பு.

18 ஆம் தேதி புதன்கிழமை – மிக பலத்த மழை பெய்யும். 85% மேல் மழைக்கு வாய்ப்பு.

19 ஆம் தேதி வியாழக்கிழமை – பலத்த மழை பெய்யும். 60% மழைக்கு வாய்ப்பு.

20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை – பலத்த மழைக்கு வாய்ப்பு.

21 ஆம் தேதி சனிக்கிழமை – லேசான மழை பெய்யும்.

22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை – மழை படிப்படியாக குறையும்.

இதுவரை பெய்த மழையையே சென்னை மாநகரத்தால் தாங்க முடியவில்லை. நகரின் ஆகப்பெரும்பாலான சாலைகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.  கழிவுநீர் பெரும்பாலும் சாலைகளில் ஓடுகிறது. இதனால் சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு, பலருக்கு காய்ச்சல், பேதி ஏற்பட்டு மருத்துவர்களை நாடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.