510-hrtWSUL

 

தொடர் மழை காரணமாக சென்னை உட்பட ஐந்து மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் நீடிக்கிறது. சென்னையில் பல இடங்களில் நேற்று இரவும் மழை தொடர்ந்து பெய்தது.    இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்னும் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. தாழ்வான இடங்களில் கழிவு நீர் புகுந்துள்ளது. சென்னையின் புறநகர் மாவட்டங்களான திருவள்ளுர் மற்றும் காஞ்சிபுரத்திலும் மழை தொடரந்து பெய்து வருகிறது.

இதனை அடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

நெல்லை மாவட்டம் குற்றாலம், தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீடிக்கிறது. குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

கோவில்பட்டி, விளாத்திகுளம், , கொடைக்கானல், ஆரணி, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகள் மற்றும், கேரள மாநிலம் குமுளி, தேக்கடி முல்லைப்பெரியாறு உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.