சென்னை:
ஜெயலலிதா உடல்நிலை குறத்து வதந்தி பரப்பிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வந்த கவர்னர், மத்திய அமைச்சர், அரசியல் கட்சி தலவர்கள் எவரும் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.  இந்த சூழலில் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து பல்வேறுவிதமான வதந்திகள் பரவி வருகின்றன.
இந்த நிலையில் முகநூல், வாட்ஸ் அப் , டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து வதந்தி பரப்பியதாக 43 பேர் மீது தமிழக சைபர் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
whatsapp-image-2016-10-10-at-5-45-14-pm
இதற்கிடையே அதிமுக தொழில் நுட்பப்பிரிவு செயலாளார் ராமச்சந்திரன்,  கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 4 ஆம் தேதி  புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் சதீஷ் சர்மா என்ற முகநூல் பெயரில் முதலமைச்சர் பற்றி தவறான பொய்யான கெட்ட நோக்கத்துடன் வதந்தி பரப்பும் விதத்தில் எழுதப்பட்டுள்ளதாகவும் அது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார். இதையடுத்து  மத்திய குற்றப்பிரிவு போலீசார் பிரிவு 306 , 505(1)(பி)(சி), 153 , 505(2) கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜ்கமல் என்பவர் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த  புகாரில்  யாரோ சில விஷமிகள் முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் பணியாளர் பேசுவது போல் பேசி அதனை  tamil entertainment.co.inஎன்ற வலைதளத்தில் பரவ விட்டுள்ளதாகவும் அதை கண்டுபிடித்து அந்த பதிவை நீக்கி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டிருந்தார்.
இதையடுத்து இதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பிரிவு 306 , 505(1)(பி)(சி), 153 , 505(2) கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த புகார்களின் மீது நடவடிக்கையில் இறங்கினர் காவல்துறையினர்.
large_cyber-crime-copy
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, தேவனாங்குறிச்சி ,காந்திநகரை சேர்ந்த சதீஷ்குமார் என்ற நபரை, வதந்தி பரப்பியதாக காவல்துறையினர் கைது செய்தனர்.  எம்.சி.ஏ. படித்துள்ள அவர்,  தனியார் நிறுவனத்தில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
கைது செய்யப்பட்ட இன்னொருவர் மாடசாமி.   tamil entertainment.co.in வெப்சைட்டை நிர்வாகித்துவருகிறார்.  மதுரை பாண்டியன் நகரை சேர்ந்த பிச்சைக்கனியின் மகன்.  மதுரை திருமங்கலத்தில் ஐடிஐ ல் ஏசி மெக்கானிக்  படித்துள்ளார்.
large_cyber-crime
கைது செய்யப்பட்ட இருவரையும் எழும்பூர் குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர் படுத்திய சைபர் பிரிவு போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாள் காவலில், புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் காவல் துறை சார்பில்,‘‘ முதல்வர் ஜெயலலிதா குறித்து தவறான தகவல்களையும், வதந்திகளையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்வதும். அதனை பிறருக்கு அனுப்புவதும் சட்டபடி குற்றம்: அவ்வாறு தவறு செய்வோர்கள் மீது ஏழுஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.