நாடுகள் தங்களுக்குள் வளர்ச்சித் திட்டங்களுக்கான அறிவையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வது மிக அவசியமானது. இந்தியாவில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் க்ளீன் இந்தியா (ஸ்வச் பாரத்) திட்டம் எகிப்து நாட்டின் “கிராமப்புற துய்மை திட்டத்தின்” மாதிரியைக் கொண்டே செயல்படுத்தப்படுகிறது என்று உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம் குறிப்பிட்டார்.

swacch

இந்திய அரசு கிராமப்புறங்களில் தூய்மையை பேணும் திட்டம் குறித்து உலக வங்கியிடம் கருத்து கேட்ட போது அவர்களுக்கு எகிப்து நாட்டில் வெற்றிகரமாக செயல்பட்டுவரும் கிராமப்புற துய்மை திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இப்போது கிட்டதட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள க்ளீன் இந்தியா திட்டம் இந்தியாவில் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இது போல நாடுகள் ஒன்றுக்கொன்று அறிவை பகிர்ந்து கொள்வது அவசியமாகிறது என்று குறிப்பிட்ட அவர் மேலும் இதேபோல இந்தியாவில் மிகப்பெரிய சாலை நெர்ட்வொர்க் இருந்தும் வெறும் 2% சாலை மட்டுமே 40% வாகன நெருக்கடியை சுமந்து கொண்டுள்ளது. இதை நெறிப்படுத்த இண்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷன் 250 மில்லியன் டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்துள்ளது. இந்த திட்டத்துக்கான பொறுப்பு சிங்கப்பூரின் க்யூப் ஹைவேஸ் என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் இப்பிரச்சனை விரைவில் களையப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.