
‘கணிதன்’ படத்திற்கு பிறகு அதர்வா கைவசம் ‘ருக்குமணி வண்டி வருது, செம போத ஆகாத, ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ ஆகிய 3 படங்கள் ரெடியாகி வருகிறது. இந்நிலையில் மற்றுமொரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் அதர்வா.
கடந்த ‘2015’-ஆம் ஆண்டு ‘டிமாண்டி காலனி’ என்ற ஹாரர் படத்தை இயக்கி நம்மையெல்லாம் பயமுறுத்திய அஜய் ஞானமுத்து தா ன் இப்படத்தை இயக்கவுள்ளார். ‘இமைக்கா நொடிகள்’ என டைட்டிலிட்டுள்ள இதனை ‘கேமியோ பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இதில் தெலுங்கு ‘ஜில், சுப்ரீம்’ புகழ் ராசி கண்ணா அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். ஹீரோயினுக்கு இணையான முக்கிய கேரக்டரில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்கப்போகிறார்.
ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யவுள்ள இதற்கு பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கவுள்ள இதன் பூஜை சமீபத்தில் சென்னையில் போடப்பட்டது. எமோஷனல் த்ரில்லராக ரெடியாகவிருக்கும் இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கவுள்ளதாம்.
தற்போது, நம்மை மிரட்டும் வில்லன் வேடத்தில் நடிக்க பாலிவுட்டில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட அனுராக் காஷ்யப்பிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இவர் சமீபத்தில் ரிலீஸான ஏ.ஆர்.முருகதாஸின் ‘அகிரா’வில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. வெகு விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel