untitled-2
நெட்டிசன்:
ராஜ்குமார் பழனிச்சாமி (Rajkumar Palaniswamy) அவர்களின் முகநூல் பதிவு:
கவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய பிரதமருக்கு ஆதார் அட்டை உள்ளதா என்ற கேள்வி எழுப்பினோம். இதற்கு பதிலளித்த பிரதமர் அலுவலகம் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதார் அட்டை உள்ளது என்று தெரிவித்தது.  பிரதமரின் ஆதார் அட்டை நகலை அனுப்புமாறு கேட்டதற்கு ஆதார் அட்டை நகலை அனுப்ப முடியாது என்று14600843_10207039511088509_6750580812589143403_nம், காரணம் ஆதார் அட்டை ஒருவரின் தனிப்பட்ட தகவலாம் அதை பொதுவில் பகிர இயலாது என்றும் தெரிவித்தது.
பிரதமரின் ஆதார் அட்டையை பொதுமக்களுக்கு காட்ட முடியாது என்று சொல்லும் அரசு ஏன் பொதுமக்களிடம் எல்லா சேவைகளுக்கும் ஆதார் அட்டையை கேட்கிறது?
அரசின் பல்வேறு சேவைகளுக்கு ஆதார் அட்டையை கேட்கிறார்கள். ஜியோ அலைபேசி சேவைக்கு கூட ஆதார் அட்டையை கேட்கிறார்கள். இது பொதுமக்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிப்பதற்கு தானே ?
பிரதமரால் ஆதார் அட்டையை காட்ட முடியாது என்றால் பொது மக்கள் ஏன் அனைத்திற்கும் எல்லோரிடமும் ஆதார் அட்டையை காட்ட வேண்டும்?