நியூயார்க்:
ஐ.நா. சபையின் பொதுச் செயலாளராக பான்கிமூன் பதவிக்காலம் முடியவதை அடுத்து, போர்ச்சுக்கீசிய முன்னாள் பிரதமர் அன்டோனியோ க்ட்டெரெஸ் அப்பதவிக்கு வர இருக்கிறார்.
1
ஐ.நா. சபையின் பொதுச்செயலாலராக இருக்கும் பான்கிமூன் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாத்ததுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான வேலைகள்  பணிகள் நடந்து வந்தன.
பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதியில் போர்ச்சுகீசிய முன்னாள் பிரதமர் அன்டோனியோ கட்டெரெஸை ஒருமனதாக தேர்வு செய்யதது ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில்.   இதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற இருக்கிறது.
1949ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி போர்ச்சுகல், லிஸ்பனில் பிறந்த க்ட்டெரெஸ் தனது  25வது வயதில் அந்நாட்டில் சோஷலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய இவர், 1995ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்று பேர்ச்சுகீசிய நாட்டின் 114வது பிரதமராக பொறுப்பேற்றார்.
அந்த பதவிக்காலத்துக்குப் பிறகு, ஐரோப்பிய கவுன்சிலின் தலைமைப் பொறுப்பு, மற்றும் ஐ.நா. சபையின் அகதிகள் நல ஆணையத்தின் தலைவராக  பணியாற்றி வந்தார்.
66 வயதான க்ட்டெரெஸூக்கு கத்திரினா வாஸ் பின்டோ என்ற மனைவி இருக்கிறார்.