
“கபாலி” படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாந்தமாக நடித்து தமிழர்களின் உள்ளம் கவர்ந்த கள்வி(!) ராதிகா ஆப்தே, ஏற்கனெவே சில இந்தி படங்களில் “எகடு தகிடாக” நடித்து சூட்டைக் கிளப்பியவர்தான். சமீபத்தில் இவர் நடித்த ‘பார்ச்டு’ இந்திப் படத்திலும் அப்படிப்பட்ட காட்சிகள் உண்டு. இந்த காட்சிகள் எப்படியோ நெட்டில் கசிய… மீண்டும் தீ பற்றிக்கொண்டது. ஆளாளுக்கு அந்த காட்சிகளைக் கண்டு, கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தார்கள்.
அவ்வளவுதான்… கொதித்தெழுந்துவிட்டார்.
“நான் எப்படி நடிக்கவும் தயங்கமாட்டேன். அது என் விருப்பம்” என்ற இண்ட்ரோவுடன் ஆரம்பித்தவர், “நிர்வாணத்தை ஏன் சர்ச்சையாக்குகிறீர்கள்? தன்னுடைய உடலை அவமானமாக உணர்பவர் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்க்க அலைவார்கள். சர்ச்சையைக் கிளப்புவார்கள்.
உங்களுக்கு நிர்வாண உடம்பை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தால் என்னுடைய வீடியோவை பார்ப்பதை ஏன் பார்க்கிறீர்கள்? உங்களையே கண்ணாடி முன்பு நின்று பார்த்துக் கொள்ளுங்கள்” என்று காரசாரமாக அறிக்கைவிட்டிருக்கிறார் “காபாலி” ராதிகா.
Patrikai.com official YouTube Channel