பாரதம் முழுதும் ஒருங்கே கொண்டாடப்படும் ஒரே பண்டிகை தீபாவளி. கிருஷ்ணபரமாத்மா, சத்யபாமா மூலம் நரகாசுரனை வதம் செய்ய.. தான் இறக்கும் முன்பு “இந்த நாளை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும்” என்று நரகாசுரன் வரம் பெற்றதாக ஐதீகம். ராவண வதம் முடிந்து, ராமர் பட்டாபிஷேகம் செய்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
நாளை 10-11-2015 செவ்வாய் கிழமையன்று அதிகாலை 03-00 மணி முதல் 06-00 மணிக்குள் எண்ணெய் குளியல் செய்ய வேண்டும். காலை 08-00 மணி முதல் 09-00 மணிக்குள் சுக்கிரன் ஹோரையில் புத்தாடைகள் அணிந்து கிருஷ்ணரையும் லட்சுமியையும் வணங்க வேண்டும்.
தீபாவளி என்பது தீப ஒளி, தீப வரிசை என்பதை நாம் அறிவோம். ஆனால் பெரும்பாலோர் தீபங்கள் ஏற்றுவதில்லை. இன்றிலிருந்து ஐந்து நாட்கள் வரை தீபங்கள் ஏற்றலாம். மாலை நேரத்தில், நல்லெண்ணைய் விளக்கு ஏற்றுங்கள். குடும்பத்தில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ அத்தனை விளக்குகள் ஏற்றுங்கள்.
அத்தனை வளங்களும் தேடி வரும்!
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!