சென்னை:
“கருணாநிதிக்கு விசுவாசம் காட்டிய நான் மோசம் போய்விட்டேன்பெற்ற பிள்ளைக்காக திமுக தலைவர் கருணாநிதி யாரை வேண்டுமானாலும் இழப்பார். அவருக்கு நம்பகமாக இருந்து ஏமாந்ததுதான் மிச்சம்” என்று நடிகரும், லட்சிய தி.மு.க. தலைவருமான டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
டி.ராஜேந்தருக்ன்கு இன்று பிறந்தநாள். ஆனால் ஜெயலலிதாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாலும், காவிரியில் நீர் தர கர்நாடக மறுப்பதாலும் தனது பிறந்த நாளை கொண்டாடப்போவதில்லை என்று ஏற்கெனவே அறிவித்தார்.
ஆனாலும் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
rajendar
அப்போது அவர், “மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். காவிரி நீர் குடித்து வளர்ந்தது காரணமாகவே நான் இவ்வாறு தமிழை அடுக்கு மொழியில் பேசிவருகிறேன். காவிரி நதிநீருக்காக ஜெயலலிதா உச்சநீதிமன்றம் வரை சென்று போராடினார். இன்று உடல்நிலை பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் தன் பெற்ற பிள்ளைக்காக யாரை வேண்டுமானாலும் இழப்பார். அதனால், தான் அந்த காலத்தில் எம்ஜிஆரை திமுகவில் இருந்து தூக்கி எறிந்தார். எம்ஜிஆருக்கு முன்னால் நான் எல்லாம் எம்மாத்திரம்
கடந்த தேர்தலில் போது கூட காங்கிரசுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால், ஒரு முறை முதல்வராக வேண்டும் என கலைஞர் கலங்கிப் பேசியதால், மாற்று அணியில் கூட சேராமல் ஒதுங்கி இருந்தேன். விசுவாசம் காட்டிய நான் மோசம் போய்விட்டேன் என்று கருணாநிதியை கடுமையாக விமர்சித்தார்.