நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கொலுசு ஒரு கவர்ச்சி கூட்டும் பாத அணிகலன். சிலம்பு, கொலுசு, மெட்டி ஆகியவை இந்தியப் பெண்களால் காலில் அணியப்படும் அணிகலன்கள். வளர்ந்த நாகரிகம் மற்றும் பண்பாடுகளில் வாழ்ந்த பெண்கள் தங்கள் கவர்ச்சியைக் கூட்டவும், செல்வச் செழிப்பினை காட்டவும் கொலுசு அணிந்தனர்.
வசதி படைத்தவர்கள் இந்தப் பாத அணிகலனில் ஜாதிக்கற்களைப் பதித்து அணிவது வழக்கம்.
பல காலம் முன்பு மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பெண்கள் தங்கள் இரண்டு கால்களிலும் பாத அணிகலன்களை அணிந்து அவற்றை ஒரு சங்கிலியால் இணைத்து விடுவது உண்டாம்.
இந்திய நடனமாதர்கள் தங்கள் அங்க அசைவுகளுக்கேற்ப இனிய ஒலி எழுப்பும் கால் சலங்கை என்ற அணிகலனை அணிந்தார்கள்.
இது போல மத்திய கிழக்கு நாடுகளில் வயிற்றசைவு நடனமாடும் மங்கைகள் கூட நுண்ணிய வேலைப்படமைந்த கொலுசுகளை அணிந்தார்கள்.
அமெரிக்காவில் கொலுசு அணியும் வழக்கம் 1950 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டது.
நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத்தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் திறம்பட வேலை செய்ய தூண்டுவதாக உடற்கூறு ஆராய்சியாளர்கள் சொல்கிறார்கள்.
வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது.
தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது.
அதாவது நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும்.
தங்கத்தில் என்று இல்லாமல் (முத்து, வெள்ளி போன்றவற்றில்) நாம் நகை அணிதல் நல்லது. பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம்.
தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை.
அத்துடன் வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக் கூடியவை.
நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். உணர்ச்சி வசப்படுதல் என்பது எப்பொழுதும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம்.
ஆரம்ப காலத்தில் நாம் எல்லோரும் கொலுசு அணிந்தோம். பின்னர் இடைப்பட்ட காலத்தில் அது பழங்கால பழக்கம் என்று கைவிடப்பட்டது. தற்பொழுது அது மீண்டும் வழக்கத்திற்கு வந்ததுள்ளது.
நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.
மேலும் பெண்களின் இடுப்பு பகுதியை ஸ்திரப்படுத்தவும் கொலுசு பயன்படுகிறது.