பெய்ஜிங்:
பிரம்பம புத்திரா நதியின் குறுக்கே அணை கட்டி, இந்தியாவுக்கு வரும் நீரைத் தடுக்க சீனா திட்டமிட்டுள்ளது.
ஸ்கியாபாகு (Xiabuqu ) என்பது பிரம்மபுத்ராவின் கிளை ஆறு. இதன் குறுக்கே 740 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் அணை அமைத்து, நீர்மின்நிலையம் அமைக்க சீனா நடவடிக்கை எடுத்துவருகிறது.

பிரம்மபுத்திரா
பிரம்மபுத்திரா

இத்திட்டத்திற்கான தலைவர், இத் தகவலை இன்று சீன அரசு செய்தி ஏஜென்சியிடம் தெரிவித்தார்.
 
இந்த அணை கட்டப்படுமானால்,  இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துவிடும். ஆகவே இரு நாடுகளும் சீனாவின் அறிவிப்பினால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன.
இந்தியாவில் இருந்து பாகிஸாதானுக்கு பாயும நீர் குறித்து இஸ்தூர் டிரிட்டி எனும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்ப்டது. இதை மறுபரிசீலனை செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளது. இதற்கு பதிலடியாக, இந்த அணை விவகாரத்தை சீனா எடுத்திருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரம்மபுத்திரா… ஒரு பார்வை..
சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள, , திபெத்தில், உற்பத்தியாகும் பிரம்மபுத்திரா ஆற்றுக்கு அங்கே  ஸாங் போ என்று பெயர்.. மொத்தம் 2800 கிமீ நீளமுள்ள இந்த ஆறு, 1700 கிமீ தூரம் திபெத்திலுள்ள மலைகளிலேயே கிழக்கு நோக்கி பயணிக்கிறது. பிறகு நாம்சா-படுவா மலையருகே, தெற்கு தென்மேற்காக வளைந்துஅருணாசல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து, அதன்பின் சமவெளிப் பகுதியை அடைகிறது. சமவெளிப்பகுதியில் இந்நதி திகாங் என்று அழைக்கப்படுகிறது. சமவெளிப் பகுதியில் 35 கிமீ தொலைவு கடந்தபின், திபங்மற்றும் லோகித் என்ற ஆறுகளோடு கூடி மிகவும் அகன்ற ஆறாக ஆகி, பிரம்மபுத்திரா என்று பெயர் மாற்றமடைந்து அசாம் மாநிலத்தில் நுழைகிறது.
அசாம் மாநிலத்தின் முதன்மை ஆறான பிரம்மபுத்திரா, ஒருசில இடங்களில் 10 கிமீ வரை அகலமுடையதாயிருக்கிறது. திப்ரூகட் அருகே அது இரண்டாகப பிரிந்து  நூறு கிலோமீட்டருக்கு அப்பால் மீண்டும் இணைகின்றன. இதனால் உருவாகியுள்ள தீவு மஜிலித்தீவு என்று அழைக்கப்படுகிறது.
வங்காளதேசத்தில் இந்த ஆறு ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது கங்கையின் கிளையாகியபத்மாவுடன் இணைந்து மிகப்பெரிய கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
பிரம்மபுத்திராவின் மூலம் சீன ஆதிக்க பகுதியில் ஆரம்பித்தாலும், அங்கு மலை பகுதியிலேயே பெரும்பாலான தூரம் வருவதால் அது மக்கள் பயன்பாட்டிற்கானதாக இல்லை. ஆனால் இந்திய பகுதியில் சமவெளியில் பாய்வதால், விவாசாயம் உள்ளிட்ட மக்களின் நீர்த்தேவாக்கு மிகவும் பயன்படுகிறது.
மேலும்,  இந்தியாவில் பெண்பால் பெயரிட்டு அழைப்பது வழக்கம், ஆனால் இவ்வாறு ‘புத்திரா’ என்று முடிவதால், இது சிறப்பாக ஆண்பால் பெயரிட்டு வழங்கப்படுகின்றது.