டெல்லி:
காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, இந்தியா சார்பில் பல்வேறு எதிர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் உருவாகி பாகிஸ்தான் வழியே சென்று கடலில் கடக்கும் சிந்து நதியின் குறுக்கே அணை கட்டுவது குறித்தும் பிரதமர் ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தானில் நடைபெற இருந்த சார்க் மாநாட்டை இந்தியா மற்றும் அதன் நட்பு நாடுகள் புறக்கணித்தன.
இந்த நிலையில், நேற்று இரவு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில் புகுந்து, பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம்.
இந்தத் தாக்குதலில் இந்திய போர் விமானங்கள் ஈடுபட்டன.
இந்தத் தாக்குதலை உறுதி செய்த பாகிஸ்தான், இருவர் பலியானதாகவும் தெரிவித்தது.
“ஆத்திரமூட்டும் நடவடிக்கையை இந்தியா கைவிட வேண்டும். உள்ளதாகவும், அமைதியாக இருப்பதற்கு பெயர் கோழைத்தனம் இல்லை” என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
இன்னொரு புறம், இந்தியா மீது அணுகுண்டு தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் டில்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ராணுவ நடவடிக்கைக்கு முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
இதற்கிடையே, இந்தியா பாகிஸ்தான் போர் ஏற்படும் என்று எல்லையோர பகுதியில் வசிக்கும் மக்கள் நம்பத்துவங்கியிருக்கிறார்கள்.
பாகிஸ்தான் எல்லையில் உள்ள பதன்கோட்டில் இருந்து பொதுமக்கள் மூட்டை முடிச்சுகளுடன் படகில் வெளியேற்றப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதே போல் அட்டாரி எல்லையில் இருப்பவர்களும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பதன்கோட்டில் மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.