
தீபாவளி நெருங்கும் நேரத்தில், ” இது தமிழர் விழா அல்ல”என்கிற வாதம் வைக்கப்படுவது வழக்கம். ஆனால் தஞ்சை பா. இறையரசன், “இது தமிழரின் விளக்கணி விழா” என்கிறார். மேலும் அவர் கூறுவதாவது..
“1எள்ளிலிருந்து நெய் எடுத்து விளக்குக்கும் சமையலுக்கும் உடல் நலத்துக்கும் பயன்பட்டதைக் கொண்டாட ஏற்பட்ட வழக்கம்.
2. முருகனின் அறுமீன் (சிந்துவெளி) வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது.
3. மா (மகா) வீரர் இறுதியுரை ஆற்றிய போது நல்லெண்ணெய் தீபந்தங்கள் ஏற்றிவைத்து விடியும் வரை கேட்டதை நினைவு கூர்வது.
4. நரகாசுரன் என்ற தீய அரக்கனைக் கண்ணன் என்னும் சேர வேளிகுல வழிவந்த அரசன் அழித்த நாள் (பிற்காலத்தில் தொன்மம்/ புராணம் ஆகியது)”
Patrikai.com official YouTube Channel