இந்திய கிரிக்கட் வாரியத்தின் செயலபாடுகளை உச்சநீதி மன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. அனுராக் தாக்கூர் உள்ளிட்ட வாரியத்தின் உயர்மட்ட தலைவர்களை நீக்கவும் பரிந்துரை செய்துள்ளது.

bcci

பி.சி.சி.ஐ நிர்வாகத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஒய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான குழு தனது பரிந்துரைகளை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. இதில் கிரிக்கெட் வாரியம் மீது கடுமையான அதிருப்தியை அது தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தையே அவமதிக்கும் செயலை கிரிக்கெட் வாரியம் செய்து கொண்டிருப்பதாகவும். நாங்கள்தான் சட்டம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் நினைத்துகொண்டால் அந்த நினைப்பு தவறானதாகும். இந்த கோர்ட்டின் உத்தரவுக்கு அவர்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். பிரபுக்கள் போல நடந்துகொள்வீர்களானால் அதன் பின்விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என்று எச்சரித்துள்ளது.
ஆனால் பிசிசிஐ சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் தாங்கள் நீதிமன்றத்துக்கு கட்டுப்பட்டுதான் வருகிறோம் என்று வாதிட்டார். இதை நிராகரித்த நீதிபதி பிசிசிஐக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். இந்த வழக்கு அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.