உடல்நல குறைவால் சென்னை அப்போலோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்தித்து வந்ததாக தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தலவரும் பிரபல நடிகருமான நாசரும், மனோபாலாவும் தெரிவித்தனர்.

முதல்வர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று நடிகர் சங்கம் சார்பில் அறிக்கையும் வெளியிட்டார்கள்.

ஆனால், “இவர்கள் இருவரும் முதல்வரை சந்திக்கவே இல்லை. நேற்றும் இன்றும், அரசு ரீதியான முக்கிய அதிகாரிகளை மட்டுமே முதல்வர் சந்தித்தார். இவர்கள் இருவரும் அப்போலோ மருத்துவமனை வராண்டாவில் உள்ள விசிட்டர் புக்கில் கையெழுத்து போட்டுவிட்டு வந்தார்கள். முதல்வரை சந்திக்க இவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் முதல்வரை சந்தித்து, விரைவில் நலம் பெற வாழ்த்து தெரிவித்ததாக பொய் சொல்கிறார்கள்” என்று நடிகரும், பத்திரிகையாளருமான வாராகி கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel