அமெரிக்காவின் மேற்கு பாலிடிமோர் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு தண்டனைக்கு பதில் தியானம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இது குழந்தைகளிடம் வியக்கத்தக்க நேர்மறையான மாற்றத்தை உண்டு பண்ணியிருப்பதாக தெரியவருகிறது.

medit

ராபர்ட். டபிள்யூ.கோல்மேன் தொடக்கப்பள்ளியில் குறும்பு செய்யும் குழந்தைகளை மற்ற பள்ளிகளின் செய்வதுபோல பிரின்ஸிபல் அறைக்கு அனுப்பாமல் தியான அறைக்கு அனுப்புகிறார்கள். அங்கு குழந்தைகள் மெல்லிய விளக்கொளியில் இதமான குஷனில் குறிப்பிட்ட நேரம் அமைதியாக படுத்திருக்க வேண்டும் அதன் பின்னர் வெளியே வரும் குழந்தைகளிடம் பெரிய மாற்றம் தென்படுகிறதாம். இப்போதெல்லாம் அப்பள்ளியில் குழந்தைகள் சண்டையிடும் சூழல் வந்தால்கூட பிரச்சனைகளை அமைதியாக பேசி தீர்த்துக் கொள்ளுகிறார்களாம்.
பள்ளியின் இந்த அணுகுமுறையும், குழந்தைகளிடம் ஏற்பட்ட இந்த மாற்றமும் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. ஹோலிஸ்டிக் லைஃப் ஃபவுண்டேஷன் என்ற தொண்டு அமைப்பின் முயற்சியே இந்த மாற்றத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.