மத்திய கிழக்கு நாடுகளில் கச்சா எண்ணை விலை வரலாறு காணாத வீழ்ச்சியடைந்ததையடுத்து சவுதி மன்னர் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் சலுகைகளை ரத்து செய்துள்ளார்.

சவுதி மன்னர் சல்மானின் இந்த உத்தரவின்படி அமைச்சர்களுக்கு 20% சம்பளம் குறைக்கப்படுகிறது. இந்த சம்பள குறைப்பு பெறுவோரில் தற்போது அமைச்சராக இருக்கும் இளவரசரும் அடக்கம். தங்களது தனிப்பட்ட தொலைபேசி கட்டணங்களை இனி அவர்களே செலுத்தவேண்டும் என்றும் அந்த உத்தரவு சொல்லுகிறது. இதுதவிர அரசு அதிகாரிகளது சம்பளத்திலும் கத்தரி விழுந்திருக்கிறது.
மேலும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டிருக்கும் வெளிநாட்டு பணியாளர்களை தவிர ஏனைய வெளிநாட்டு பணியாளர்களுக்கு அவர்களது ஒப்பந்தம் வரும் ஆண்டில் புதுப்பிக்கப்படாது என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.
Patrikai.com official YouTube Channel