திண்டுக்கல்:
திண்டுகல்லில் உள்ள பாரதியஜனதா நிர்வாகி போஸின் வீட்டிலுள்ள காரை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர். மேலும் பாரதிய ஜனதா  அலுவலகம் மீதும்  மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதன் காரணமாக திண்டுக்கல் நகர் பரபரப்பாக காணப்படுகிறது.
bjp-fire petrolbomb
திண்டுக்கல் கரூர் ரெயில்வே கேட் வழிவிடும் விநாயகர் கோவில் அருகே பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது.
தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் கடந்த சில நாட்களாக நிர்வாகிகளிடையே விருப்ப மனு வாங்கப்பட்டு வருகிறது.
இன்று காலை அந்த பகுதிக்கு  மர்ம நபர்கள்,  திடீரென பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு ஒன்றை வீசினர். பெட்ரோல் பாட்டில் வெடித்து அந்த பகுதி தீப்பிழம்பாக காட்சியளித்தது.
இதைகண்ட   அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர். மக்கள் வருவதை கண்டதும் மர்ம நபர்கள்    தப்பி ஓடிவிட்டனர்.
இந்த தகவல் அறிந்ததும் ஏராளமான பாரதீய ஜனதா கட்சி தொண்டர்கள்  மற்றும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் திரண்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் திண்டுக்கல் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினை எழாதவாறு தடுத்தனர்.
இதையடுத்து, தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு  வந்து, அங்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பாட்டில்களை சேகரித்த்னர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டை வீசி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.  இதன் காரணமாக அந்த  பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
பாஜ நிர்வாகி காருக்கு தீ வைப்பு
பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக இருப்பவர்  போஸ். இவர் திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டில் மின்வாரிய அலுவலகம் பின்புறமுள்ள அழகு நகரில் வசித்து வருகிறார்.
தனது காரை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இன்று அதிகாலை 3.30 மணியளவில் மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு, தப்பியோடினர். இதில் கார் தீப்பற்றி எரிந்தது
. போஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி, தீயை அணைத்தனர்.
கடந்த 16ம் தேதி, திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சியின் தென் மண்டல தலைவர் தர்மா என்பவரது கார் தீ வைத்து எரிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
போஸ் கூறுகையில், “தமிழகம் முழுவதும் இந்து கட்சிகளை ேசர்ந்த நிர்வாகிகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளது. இதனால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன’’ என்றார்.
இது குறித்த புகாரின் பேரில், நகர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் பகுதியில் அடுத்தடுத்து நடைபெற்றுள்ள தீ வைப்பு சம்பவங்களால் அந்த பகுதி  பதற்றமாக காணப்படுகிறது.