கோவை:
ந்துமுன்னணியை சேர்ந்த சசிகுமார் கொலை செய்யப்பட்டதை அடுத்து கோவையில் வன்முறை தலைதூக்கியது.  இறுதி ஊர்வலத்தின்போது சமூக விரோதிகள் ரோட்டின் கரையோரம் இருந்த கடைகளை அடித்து நொறுக்கி பொருட்களை சூறையாடினர்.
vellaiyan_1
வன்முறையால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளின் கடைகளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன், இன்று நேரில் சென்று பார்வையிட்டு வியாபாரிகளுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளையன்,
கோவையில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தால் வணிகர்களின் கடைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அமைதி பூங்காவாக திகழும் கோவையில் நடந்த இந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது.
இதில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு தமிழக அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும். மேலும் கோவையில் வியாபாரிகளுக்கு போதிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்றார்.