உரி தாக்குதலில் வீரமரணம் அடைந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராணுவவீரரான கங்காதர் டோலுயின் தந்தை அரசு தந்த பணத்தை ஏற்க மறுத்து ரூ.10,000 அக்கம்பக்கத்தினரிடம் கடன் வாங்கி தனது மகனின் இறுதிச் சடங்கை நடத்தினார்.

இதே உரி தாக்குதலில் வீரமரணமடைந்த உ.பி, ராஜஸ்தான், பீகார் மற்றும் ஜார்கண்ட்டை சேர்ந்த வீரர்களுக்கு தலா 41 லட்சத்தை அந்தந்த மாநிலங்கள் கொடுப்பதாக உறுதிமொழி அளித்திருக்கின்றன. அத்துடன் ஏராளமான சலுகைகளும் அறிவிக்கப்ட்டுள்ளது.
ஆனால் மேற்குவங்க அரசு கங்காதர் டோலுயின் குடும்பத்துக்கு கொடுப்பதாக அறிவித்த சன்மானம் வெறும் 2 லட்சமே. இது அம்மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தரும் உதவித்தொகையாகும். இது தவிர மிக சொற்ப சம்பளத்துடன் கூடிய செக்யூரிட்டி வேலையையும் தருவதாக அரசு அறிவித்தது. இந்த இரண்டையுமே கங்காதரின் தந்தை ஏற்க மறுத்து, தேசத்துக்காக உயிர்நீத்த தன் மகனின் இறுதிச் சடங்கை அக்கம்பக்கத்தில் கடனை வாங்கி நடத்தி முடித்தார்.
மேற்குவங்க அரசின் இந்த செயலை கண்டித்து “இது ஒரு தியாகிக்கு இழைக்கப்பட்ட அவமானம்” என்ற ரீதியில் எதிர்ப்புக்குரல்கள் குரல்கள் அம்மாநிலத்திலும் சமூக வலைதளங்களிலும் எழத் தொடங்கியுள்ளன.
Patrikai.com official YouTube Channel