குஜராத்:
றந்த பசு மாட்டின் உடலை அகற்ற மறுத்த தலித் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் சரமாரி தாக்கினர். இந்த தாக்குதலில் கர்ப்பிணி பெண் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
குஜராத்தில் உள்ள பனஸ்கந்தா மாவட்டத்தில் தனது வீட்டில் இறந்த பசு மாட்டின் உடலை அகற்ற சொல்லி அப்பகுதியைச் சேர்ந்த தலித் குடும்பத்தை கூறியிருக்கிறார்.
lady
 
இதற்கு அவர்கள்  மறுப்பு தெரிவித்துள்ளனர். இதைதொடர்ந்து  கும்பல் ஒன்று  இவர்களது வீட்டிற்குள் புகுந்து உருட்டு கட்டையால்  இருவரையும் தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் கர்ப்பிணி பெண்ணும் படுகாயமடைந்தார்.
தாக்குதலுக்கு உள்ளான  தலித் பெயர் நிலேஷ்பாய் துனாபாய் ரன்வாசியா, அவரது மனைவி சங்கீதாபென். இவர் தற்போது  கர்ப்பிணியாக இருக்கிறார். தாக்குதலில் படுகாயம் அடைந்த சங்கீதா தற்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தாக்குதல் குறித்து நிலேஷ்பாய் போலீசில் புகார் அளித்தார்.  போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து  அப்பகுதியைச் சேர்ந்த 6 பேரை கைது செய்துள்ளனர்.
இதையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. தலித் குடும்பங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஜூலை 11ம் தேதி சோம்நாத் மாவட்டத்தில் உனா என்ற இடத்தில் செத்த பசு மாட்டின் தோலை உரித்த 4 தலித் இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து குஜராத் மட்டுமல்லாத இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. இந்த நிலையில் இதுபோல் மற்றொரு சம்பவம் நடைபெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.