“ஒரு பெக் போட்டாத்தான் தூக்கமே வரும்” என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறோம். இரவு தூக்க மருந்தாக மதுவை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால் அது பெரும் ஆபத்து என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

madhu

ஹென்றி ஃபோர்ட் ஸ்லீப் ரிசர்ச் சென்டர் என்ற அமைப்பை சேர்ந்த டாக்டர் தாமஸ் ரோத், தாங்கள் செய்த ஆய்வில் தூக்கத்துக்காக மது அருந்துவது நல்ல தூக்கத்தை தருவது போல தோன்றினாலும் உண்மையில் உங்கள் தூக்கம் மட்டுமல்ல மூளையும் சேர்த்து பாதிக்கப்படும் என்ற அதிர்ச்சிகர உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூருகிறார். மது அருந்துவிட்டு தூங்கும்போது உங்கள் தூக்கம் உடலை இளைப்பாற்றும் தூக்கமாக அமைவதில்லை, அதுமட்டுமன்றிஅந்த சமயத்தில் உங்கள் உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்கள் உங்களது ஆரோக்கியத்துக்கு உலை வைக்கக் கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆல்கஹால் எதுவும் எடுக்காமல் தூங்கப் பழகுங்கள் அதுதான் ஆரோக்கியம், அதுமட்டுமல்ல மது அருந்திவிட்டு உறங்க பழகியவர்கள் மறுநாள் எழுந்து தங்கள் வேலைகளை திறம்பட முடிப்பதற்கு கூட சிரமப்படுவதாகவும் தங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளதாக டாக்டர் தாமஸ் கூறியுள்ளார்.