நீங்கள் அடிக்கடி விமானத்தில் பயணிப்பவராகவோ அல்லது நட்சத்திர ஓட்டலில் அடிக்கடி தங்குபவராகவோ இருந்தால் உங்கள் ரிவார்ட்ஸ் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு நீங்கள் பெற்றிருக்கும் ரிவார்டுகளை வேறு ஒருவர் பயன்படுத்திக் கொள்ளும் அபாயம் இருக்கிறது.
hak
இது போன்றதொரு அனுபவம் பிரபல சுற்றுலா வலைதளம் ஒன்றை நடத்து சாக் ஹோனிக் என்பவருக்கு ஏற்ப்படுள்ளது. அவர் மெக்ஸிகோவில் இருந்தபோது அவருக்கு வந்த மின்னஞ்சல் ஒன்று அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அவர் கனன்க்டிகட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்குவதற்காக அவரது ரிவார்ட் பாயிண்டுகள் பயன்படுத்தப்பட்டதை உறுதி செய்யும் மின்னஞ்சல் அது. இதை உறுதிசெய்ய அவர் அந்த ஹோட்டலுக்கு மெக்ஸிகோவில் இருந்து போன் செய்ய “ஆம் விருந்தினர் இப்போதுதான் வந்திருக்கிறார்” என்று அவர்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
ஆக நமது ஏர்லைன், நட்சத்திர ஓட்டல் போன்றவற்றின் ரிவார்ட்ஸ் அக்கவுண்டுகள் ஹேக் செய்யப்பட்டு நமது ரிவார்ட் பாயிண்ட்டுகளை வேறொருவர் பயன்படுத்திக் கொள்ளக்கூடும்.
இதை தடுப்பது எப்படி?
1. உங்கள் போர்டிங் பாஸின் படத்தை எடுத்து சமூக வலைதளங்களில் பகிராதீர்கள். அதிலுள்ள தகவல்களை எடுத்து உங்கள் ரிவார்ட்ஸ் அக்கவுண்ட்டை ஹேக் செய்வது எளிது.
2. உங்கள் ரிவார்ட்ஸ் அக்கவுண்டின் கடவுச்சொல்லை அடிக்கடி மாற்றுங்கள்.
3. உங்கள் ரிவார்ட்ஸ் அக்கவுண்ட்டுக்கு அடிக்கடி சென்று அதை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
நாம் பாடுபட்டு சம்பாதித்த ரிவார்டுகளை அடுத்தவன் அள்ளிக்கொண்டு போக விடுவானேன்! உங்கள் பயணங்கள் இனிமையாகட்டும்!