தூங்கிக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனரை பவிவாங்கியதோடு 11 பேர் படுகாயமடைய காரணமான சென்னை சொகுசு கார் விபத்தில் குடிபோதையில் காரை ஓட்டி விபத்துக்குள்ளாக்கியது யார் என்பது மர்மமாக உள்ளது.

சம்பவத்தின்போது காருக்குள் இருந்தது விகாஸ் ஆனந்த் மற்றும் சரண் குமார் இருவரும்தான். காரை விகாஸ்தான் ஓட்டினார் என்று சரணும், சரண்தான் ஓட்டினார் என்று விகாசும் மாறி மாறி பழிசுமத்திக் கொள்கின்றனர்.
விகாஸ் ஆனந்த் தேசிய கார் பந்தய சாம்பியன் ஆவார். கார் மணிக்கு 140 கி.மீ வேகத்தில் வந்து மோதியதால்தான் இவ்வளவு பெரிய விபத்து நிகழ்ந்திருக்கிறது. எனவே இவர்தான் காரை ஓட்டிவந்தார் என்று முதலில் கருதப்படுகிறது. ஆனால் நான் காரை ஓட்டவில்லை என்று விகாஸ் மறுத்திருக்கிறார். தான் சிறையில் மிகவும் அவதிப்படுவதாகவும் தனக்கு அக்டோபர் 20-ம் தேதி தேர்வு இருப்பதாகவும் எனவே தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனு அளித்திருக்கிறார்
காரினுள் இவரது நண்பர் சரண் குமார் என்பவர் இவருடன் இருந்திருக்கிறார். சரண்குமார் சென்னையில் ஒரு ஆட்டோ மொபைல் ஷோரூம் நடத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. தான் வண்டியை ஓட்டவில்லை, விகாஸ் காரை ஓட்ட நான் பின்னால்தான் அமர்ந்திருந்தேன் இதில் நான் குற்றவாளி அல்ல எனவே தனக்கு ஜாமீன் வழங்கும்படி சரண்குமாரும் மனு அளித்திருக்கிறார்.
இருவருமே தான் காரை ஓட்டவில்லை என்று மறுத்துவரும் நிலையில் யார் காரை ஓட்டியது என்பது மர்மமாக உள்ளது.
Patrikai.com official YouTube Channel