சென்னை:
சென்னையில் வரும் திங்கட்கிழமை (26ந்தேதி)  மாலை திருப்பதி திருக்குடை கவுனி தாண்டுகிறது.
திருப்பதி திருக்குடைகள் சேவா சமிதி அறக்கட்டளை மற்றும் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் இருந்து 21 திருக்குடைகள் உபய உற்சவ ஊர்வலமாக சென்று திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்படுவது வழக்கம்.
tirupathi2
இத்திருக்குடை ஊர்வலத்தின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா என்ற கரகோஷத்துடன்  ஊர்வலத்தில் உடன் செல்வர்.
இந்தாண்டு திருப்பதி  திருக்குடை ஊர்வலம்,  சென்னை பாரிமுனையில் உள்ள சென்னகேசவபெருமாள் கோயிலில்  விசேஷ பூஜைகளுடன்  21 திருக்குடைகள் வரும் 26ம் தேதி  (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் தாரை, தப்பட்டை, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்படுகிறது.
திருக்குடை ஊர்வலம் என்எஸ்சி போஸ்ரோடு வழியாக வால்டாக்ஸ் ரோடு, யானைகவுனி மேம்பாலம், சூளை, பெரம்பூர் பேரக்ஸ்ரோடு, பட்டாளம், ஓட்டேரி வழியாக சென்று அன்று இரவு அயனாவரம் சென்றடைகிறது.
ஊர்வலத்தில் ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகுமார், முன்னாள் டிஜிபி பெருமாள், ராதாகிருஷ்ணன், டி.டி.கணேஷ், வேதானந்தா, அழகப்பா கல்விக் குழும இயக்குநர் நரேஷ்குமார், விஎச்பி வாசுதேவன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
அன்று மாலை 4 மணிக்கு யானைகவுனியை தாண்டுகிறது.