a
சென்னை:
மிழக முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நல குறைவு காரணமா, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். “அவருக்கு சிறு உடல் உபாதைதான். அதே நேரம் மருத்துவர்களின் கண்காணிப்பு அவசியம்” என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் நீரிழிவு மற்றும் கிட்னி பிரச்சினைகளுக்காக சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெறப்போகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேற்று தனது ட்விட்டர் பதிவில் சுப்பிரமணய சுவாமி, சிங்கப்பூர் சென்று ஜெயலலிதா சிகிச்சை பெற வேண்டும் என்று தெரிவித்தது குறிப்படத்தக்கது.