குமாரசாமி - கர்நாடக சட்டபேரவை கூட்டம் ஜெகதிஸ் ஷெட்டர்
 முன்னாள் முதல்வர் குமாரசாமி  – கர்நாடக சட்டபேரவை கூட்டம் முன்னாள் முதல்வர் ஜெகதிஸ் ஷெட்டர்

பெங்களூரு:
மிழகத்திற்கு  காவிரியில் இருந்து தண்ணீர் கொடுக்க முடியாது’ என, கர்நாடகா சட்டசபையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதை எதிர்த்து கர்நாடக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  மேலும் கர்நாடகாவின் குடிநீர் தேவைக்காக மட்டுமே காவிரி நீரை பயன்படுத்தவும்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காவிரி பிரச்சினை பற்றி விவாதிக்க சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் பெங்களூரில் கூட்டப்பட்டது. சட்டசபையில் இதற்கான தீர்மானத்தை  மாநில எதிர்கட்சி தலைவரும், பாரதிய ஜனதாவை கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டர்  முன் மொழிந்தார்.
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு தொடர்ந்த வழக்கையடுத்து,  ‘தமிழகத்திற்கு, வினாடிக்கு, 6,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும்’  கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட், 20ம் தேதி உத்தரவிட்டது.
diddarமேலும், ‘காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, நான்கு வாரங்களுக்குள், காவிரி மேலாண்மை
வாரியத்தை அமைக்க வேண்டும்’ என்றும் மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தர விட்டது.
இதையடுத்து கர்நாடகாவில்  அனைத்து கட்சி கூட்டத்தை அம்மாநில முதல்வர் சித்தராமையா கூட்டினார். அதைதொடர்ந்து சட்டசபை சிறப்பு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்படி, கர்நாடகா சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ‘காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க முடியாது; இருக்கும் தண்ணீர், பெங்களூரு, மைசூரின் குடிநீர் தேவைக்கு மட்டும் பயன்படுத்தப்படும்’ என்று, தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து எதையும் குறிப்பிடாமல், அனைத்துக் கட்சிகள் சார்பில், இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கான தீர்மானத்தை, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், பா.ஜ., மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் முன்மொழிந்தார்.
தீர்மானம் குறித்து பாரதியஜனதா சார்பில் ஜெகதிஷ் ஷெட்டரும், மதசார்ப்ற்ற ஜனதாதளம் சார்பில் குமாரசாமியும்  பேசியது குறிப்பிடத்தக்கது.
காரசாரமான விவாதங்களுக்குப் பின், தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. முன்னதாக, கர்நாடகா மேல் சபையிலும் இதுபோன்ற தீர்மானம் முன் மொழியப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது.
இதன்மூலம்  தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடக கைவிரித்து விட்டது.