சிங்கப்பூரில் கட்டடப் பணி, கப்பல் கட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டிருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களிடம் பெரும்பாலும் 2ஜி மொபைல்களே உள்ளன. இவர்கள் பெரும்பாலும் இந்தியா, பங்களாதேஷ், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து வந்து பணிபுரியும் ஏழைகளாவர்.
அங்கு வரும் ஏப்ரல் 2017 முதல் 2ஜி மொபைல்கள் வழக்கொழிந்து போகவிருக்கின்றன. எனவே வெறும் 2ஜி மொபைல்கள் வைத்திருக்கும் இவர்கள் தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவோ, அல்லது அவசர காலங்களில் யாரையும் உதவிக்கு அழைக்கவோ கூடாமல் போகலாம்.

donate_3g_phone

இச்சூழலில் இது போன்ற தொழிலாளர்களுக்கு சேவை செய்துவரும் தொண்டு நிறுவனமான TWC2 ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதன்படி வசதியுள்ள சிங்கப்பூரர்கள் தங்களது பழைய 3ஜி ஸ்மார்ட்போனை இந்த நிறுவனத்திடம் கொடுத்துவிட்டால் இந்நிறுவனம் ஒரு தேவையுள்ள தொழிலாளரிடம் அந்த ஸ்மார்ட்போனை கொண்டு சேர்த்துவிடும்.
நீங்கள் சிங்கப்பூரில் வசிப்பவராக இருந்தால் உங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை ஏழைத் தொழிலாளரருக்கு தந்து உதவ விரும்பினால் கீழ்கண்ட முகவரியில் உள்ள இந்த தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்துக்கு சென்று உங்கள் பழைய ஸ்மார்ட்போனை அவர்களிடம் ஒப்படைக்கலாம்.
Transient Workers Count Too,
5001 Beach Road #09-86,
Golden Mile Complex,
Singapore 199588
நேரம்: திங்கள் – வெள்ளி 9:30 – 6.00 மணி (அரசு விடுமுறை நாட்கள் தவிர)
பழைய ஸ்மார்ட்போன்கள் இல்லாத பட்சத்தில் உங்களால் முடிந்த ஒரு சிறு தொகையையும் நன்கொடையாகக் கொடுக்கலாம். சிங்கப்பூரில் நல்ல நிலையிலுள்ள பழைய 3ஜி ஸ்மார்ட்போன்கள் வெறும் 30-50 டாலர்களுக்கு கிடைக்கும். கீழ்கண்ட இணையதள முகவரிக்கு சென்று உங்கள் நன்கொடையை ஆன்லைனிலேயே செலுத்தலாம்.
https://www.giving.sg/transient-workers-count-too/3g