L-wbH

ஜீத்துக்கு உடம்பெல்லாம் விழுப்புண்கள்தான்.  ரேஸ்களில் கலந்துகொள்ளும்போது, படப்பிடிப்புகளில் என நிறைய விபத்துகள்,  நிறைய ஆபரேஷன்கள்…

இப்போது அடுத்த ஆபரேஷன்.  வேதாளம் படப்பிடிப்பின்போது சண்டைக் காட்சியில்  காலில் அடிபட்டது அஜீத்துக்கு. அதனால்தான் நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்கக்கூட வரவில்லை என்று சொல்லப்பட்டது.  விவேக் மகன் இறந்த அன்றுகூட, காலை நொண்டியபடியே வந்து அஞ்சலி செலுத்துவிட்டுப்போனார்  அஜீத்.

இந்த நிலையில் வரும் 20ம் தேதிக்கு மேல் காலில் ஆபரேஷன் நடக்க இருக்கிறது. அதன் பிறகு, நான்கு மாதங்கள் கட்டாயமாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

[youtube-feed feed=1]