இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் யார் என்று அமெரிக்காவின் பிரபல வணிக இதழான ஃபோர்ப்ஸ் செய்த ஆய்வில் தொடர்ந்து 9-வது ஆண்டாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருக்கிறார், இவரது சொத்தின் மதிப்பு 22.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

இவரை அடுத்து சன் ஃபார்மா நிறுவனத்தின் திலீப் சங்வி 16.9 பில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்திலும் இந்துஜா குடும்பத்தினர் மூன்றாவது( 15.2 பில்லியன் டாலர்கள்) இடத்திலும், விப்ரோவின் அசிம் பிரேம்ஜி நான்காவது (15 பில்லியன் டாலர்கள்) இடத்திலும் இருக்கின்றனர்.
இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனரும், பாபா ராம்தேவின் நண்பருமான ஆச்சார்யா பாலகிருஷ்ணா 2.5 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 48வது இடத்தை பிடித்து அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கி இருக்கிறார்.
Patrikai.com official YouTube Channel