சுவாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் மரணமடைந்த ராம்குமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கென்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் -5°C வெப்பநிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
03-1467520765-ramkumar43-600
சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், கடந்த 18-ம் தேதி புழல் சிறையில் மின் கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப் படுகிறது. தனது மகன் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும் இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவர்கள் குழுவில் தங்களது தரப்பு மருத்துவர் ஒருவரையும் சேர்க்க உத்தரவிட வேண்டும்’ எனவும் ராம்குமாரின் தரப்பு கோரியிருந்தது.
இதில் இன்னும் இறுதியான முடிவுகள் எட்டப்படாமல் இழுபறி நீடித்துவரும் வரும் நிலையில் இந்த தாமத்தால் பரிசோதனை செய்யப்பட வேண்டிய ராம்குமாரின் உடல் சிதைவடைந்து விடாமல் இருக்க அது -5°C வெப்பநிலையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த வெப்ப நிலையில் காயங்கள் அழுகவோ மறையவோ செய்யாது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் -20°C வெப்பநிலையில் வைக்கப்பட்டால் அவ்வுடலை பல மாதங்களுக்கு பதப்படுத்த இயலும் ஆனால் உடலின் நிறம் மாறிவிடும் என்றும் எனவேதான் பாதுகாப்பாக -5°C வெப்பநிலையில் உடல் வைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.