oo

நேற்று இந்து நாளேட்டின் இந்து மையம் சார்பாக, ஈழத்தமிழர் குறித்த கூட்டம் ஒன்று சென்னையில் நடந்தது. அதில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சி முடிந்து மேடையிலிருந்து கீழே இறங்கி வந்த அவரை, பிரபாகரன் என்ற வாலிபர் செருப்பால் சரமாரியாக அடித்தார். உடனடியாக அவரை பாதுகாவலர்கள் பிடித்தனர்.

அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “நான் எந்த இயக்கத்தையும் சார்ந்தவன் அல்ல. ஈழத்தமிழர்க்காக குரல் கொடுக்கும் அனைத்து  அமைப்பின் போராட்டங்களிலும் கலந்துகொள்வேன்.

11

எம்.கே. நாராயணன், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தபோதுதான் ஈழப்போர் நடந்தது. அப்போது தமிழர்களுக்கு எதிராக இவர் நடந்துகொண்டார். ஆகவேதான் அவரை செருப்பால் அடித்தேன்”  என்றார்.

அவர் மீது கொலை மிரட்டல், (506 (2) பொது இடத்தில் ஒருவரை தாக்கி அவமானப்படுத்துதல் (356), தாக்குதலில் ஈடுபடுதல் (323, 324) ஆகிய 4 சட்டப்பிரிவுகளில் பிரபாகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

rav

விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  பொதுச் செயலர், ரவிகுமார், பிரபாகரநுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது முகநூல் பக்கத்தில், “தி இந்து நாளேட்டின் சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருந்த முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தாக்கப்பட்டது கண்டனத்துக்குரியது.

மதவாத உதிரிகளின் வன்முறை நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நேரம் இது. பாதிக்கப்பட்டவர்கள்கூட (victims) தமது எதிர்ப்பு வடிவம் மதவாத சக்திகளுக்கு உதவிவிடக்கூடாது என்பதில் இப்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.”  என்று குறிப்பிட்டுள்ளார்.