மன்னார்குடி:
காவிரி விவகாரத்துக்காக தீக்குளித்து உயிரிழந்த விக்னேஷின் இறுதி ஊர்வலம் இன்று மாலை மன்னார்குடியில் தொடங்க இருக்கிறது.  இறுதி ஊர்வலத்தில் வைகோ, சீமான் மற்றும் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
தீக்குளித்த விக்னேஷ் காவிரி பிரச்சனைக்கு உரிய தீர்வுகாண வலியுறுத்தியும், கர்நாடகாவில் தமிழர்கள் மீதான  தாக்குதலைக் கண்டித்தும் சென்னை எழும்பூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விக்னேஷ் தீக்குளித்து உயிரிழந்தார்.
இதையடுத்து விக்னேஷின் உடலுக்கு சீமான், வெள்ளையன், பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் மருத்துவமனையில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் விக்னேஷின் உடல், நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகமான வளசரவாக்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு விக்னேஷின் உடலுக்கு, இயக்குநர்கள் விக்ரமன், வி. சேகர், களஞ்சியம், வெற்றிமாறன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுதது அவரது உடல் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது.
மன்னார்குடியில் சொந்த வீட்டில் வைக்கப்பட்ட விக்னேஷின் உடலுக்கு நாம் கட்சியின் கொடி போர்த்த நாம் தமிழர் கட்சியினர்  முற்பட்டனர். அதற்கு உறவினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து விக்னேஷின் தாயாரும் கொடியை போர்த்த மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் மன்னார்குடியில் இன்று காலை 10 மணி வரை விக்னேஷின் உடல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. விக்னேஷ் உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ மன்னார்குடியில் அஞ்சலி செலுத்தினார். மேலும் பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சிபிஐ மகேந்திரன், பாஜக கருப்பு முருகானந்தம்  ஆகியோரும் விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இன்று மாலை இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.
திருவாரூர்மா வட்டகாவல்துறைகண்காணிப்பாளர்தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்..