ர்நாடகாவில், கன்னட வெறியர்களால் தாக்கப்பட்டு, ஆடை அவிழ்க்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட லாரி ஓட்டுனர் மணிவேலை அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது.
அந்த மனிதர் இன்னமும் தவித்துக்கொண்டுதான் இருக்கிறார் என்பது கூடுதல் சோகம்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள சிறு கிராமமான கல்பாறையை சேர்ந்தவர் 33 வயதான மணிவேல். அப்பா சிறு விசாயி. வறுமையான குடும்பம். ஆகவே எட்டாவதோடு படிப்பை நிறுத்திவிட்டு லாரியில் கிளீனராக செல்ல ஆரம்பித்தார். பிறகு ஓட்டுனர் ஆனார்.
திருமணாகி இரு சிறு குழந்தைகள் இருக்கின்றன. நாமக்கல் தென்முருகன் லாரி சர்வீசில் வேலை.
இவர் ஓட்டும் லாரி, ஹெச்பிசில் (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேசன்) நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. பெங்களூருவில் இருந்து மங்களூருக்கு ட்ரிப் அடிக்க வேண்டும்.
அப்படி மங்களூரிலிந்து லாரியில் திரும்பிக்கொண்டிருந்த வேளையில்தான், பெங்களூரு புறநகர் பகுதியில் அந்த கொடுமை நடந்தது.
14348991_566361660240549_788913520_n
அது பற்றி பேசும்போதே மணிவேலுக்கு தொண்டை கமறுகிறது. சமாளித்துக்கொண்டு பேசுகிறார்:
“போன திங்கட்கிழமை… 12ம் தேதி. பெங்களூரு நோக்கி வந்துகிட்டிருந்தேன். வழக்கமா இருக்கிற கிளீனர் பையன் இல்லே. பிரச்சினையா இருக்கு, ஊருக்கு போறேன்னு சொல்லிட்டு முதல் நாளே கிளம்பிட்டான்.
பெங்களூருவை நெருங்கறப்போ, டூவீலர்ல வந்த ரெண்டு பேரு, “அந்தப்பக்கம் போகாதே.. பிரச்சினையா இருக்கு.. திரும்பிடு”னு சொன்னாங்க.
ரெண்டு கிலோமீட்டர் போயித்தான் யு டர்ன் பண்ண முடியும். அதனால நேரா போனேன். யு டர்ன் பண்ற நேரத்துல  இருபது டூவீலர்களுக்கு மேல இருக்கும்… ஆளுங்க வந்து மறிச்சாங்க.
என்ன ஏதுன்னு சுதாரிக்கிறதுக்குள்ள, வண்டி மேல கல்லெறிய ஆரம்பிச்சாங்க. முன்பக்க கண்ணாடி உடைஞ்சி என்மேலயும் பட்டுச்சு… பயந்துபோயி சைடு கதவு வழியா இறங்கினேன்..
ஆளாளுக்கு அடிக்க ஆரம்பிச்சாங்க. என் சட்டையை கிழிச்சாங்க. கைலிய உருவினாங்க.
“காவிரி யாருக்கு சொந்தம்”னு அதட்டலா கேட்டாங்க. உயிருக்கு பயந்து, “கர்நாடகாவுக்கு சொந்தம்”னு சொன்னேன்.
அந்த கும்பல்ல இருந்த ஒருத்தன், “உங்க முதல்வர் ஜெயலலிதாவுக்கு போன் போடு”ன்னு சொன்னான்.
“அவங்க நம்பர் என்கிட்ட இல்லே”னு சொன்னேன்.  அதுக்கும் அடிச்சாங்க.
சட்டையை கிழிச்சி, கைலியை உருவி… ஜட்டியோட குதிகால் போட்டு உட்கார வச்சாங்க.
“காவிரி கர்நாடகாவுக்குத்தான் சொந்தம்னு சொல்லுடா”னு மறுபடி ஆளாளுக்கு அடிச்சாங்க..” என்றவரால் அதற்கு மேல் பேச முடியாமல் மவுனமானார்.
சில நிமிடங்கள் கழித்து அவரே தொடர்ந்தார்:
“இந்த வீடியோ டிவியல வந்த பிறகு வீட்டிலேருந்து மனைவி மற்றும் குடும்பத்தார் பதட்டமா போன் பண்ணாங்க. நண்பர்கள் சிலரும் பேசினாங்க. ஆனா, எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலை.
பயமாவும், வெட்கமாவும் இருக்கு.
இப்பக்கூட அதே உணர்வுதான் மனசுக்குள்ள கொல்லுது” என்று மெல்லிய குரலில் சொன்னார் மணிவேல்.
அவரிடம், “பணியை விட்டு விடுமுறையிலாவது ஊருக்கு வரலாமே..” என்றேன்.
14322663_200061063747934_4090639722488596086_n
\அதற்கு அவர், “அப்படி வர முடியாது. என்னோட லாரியில கேஸ் சிலிண்டருங்க இருக்கு. இப்பவும் பெங்களூரு பக்கத்திலதான் இருக்கேன். இந்த லோடுங்கள இறக்க ரெண்டு நாள் ஆகும். அதுவரைக்கும் நான்தான் பொறுப்பு..” என்றார்.
அதோடு, “என் போட்டோ டிவி, பேஸ்புக்கனு எல்லா இடத்திலும் வந்துருச்சு. கர்நாடகால வேலை பார்க்கவே பயமா இருக்கு. அதனால ஊருக்கு வந்து தமிழ்நாட்டிலேயே ஏதாவது வேலை பார்க்கணும்” என்றார்.
“தற்போது பணத்துக்கு ஏதும் பிரச்சினை இல்லையே…உங்களுக்கு ஒருவர் 2500 ரூபாய் பணம் அனுப்பியதாக பேஸ்புக்கில் பதிவிட்டாரே” என்றேன்.
“ஆமாம்.. ஒருத்தர் நல்ல மனசோட அனுப்பிவச்சார். ஆனா ஏடிஎம் போயி என்னால எடுக்க முடியலை. அது ஊருக்குள்ள இருக்கு. போக பயமா இருக்கு” என்றார்.
“சாப்பாட்டுக்கு என்ன பண்றீங்க..” என்றேன்.
“இங்க நான் இருக்கிற இடத்துல, கம்பெனி கேண்டீன் ஒன்னு இருக்கு. அதுல சாப்பிடுறேன். ரெண்டுநாள் கழிச்சுதான் ஊருக்கு வரணும்..” என்றார்.
ஓட்டுனர் மணிவேல் எண்:  9449 383329.
அவருக்கு ஆறுதல் கூறி, உதவி செய்யக்கூடிய பெங்களூரு நண்பர்களுக்காக.
– டி.வி.எஸ் சோமு
ஓட்டுனர் மணிவேல் தாக்கப்பட்ட வீடியோ: