விநாயகர் சதுர்த்தியை விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். பஞ்சாபில் பேக்கரி உரிமையாளர் ஒருவர் சாக்லேட்டில் விநாயகர் செய்து வழிபாடு நடத்தினர்.
இந்த சாக்லேட் விநாயகரை பாலில் கரைத்து குழந்தைகளுக்கு சாக்லேட் பாலாக கொடுக்க இருப்பதாக தெரிவித்தார்.
பஞ்சாப் மாநிலம் லூதியாஅனா நகரில் உள்ள ஒரு பேக்கரியில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு 40-கிலோ எடையில் பெல்ஜியம் சாக்லேட்டில் மூன்று அடி உயரமுள்ள அழகான விநாயகர் சிலையை உருவாக்கி உள்ளனர்.
இந்த சாக்லேட் விநாயகரை அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் ஆர்வத்தோடு பார்த்து, வணங்கி செல்கின்றனர்-
இந்த விநாகர் சிலையை அது வழக்கம்போல தண்ணீரில் கரைக்காமல், பாலில் கரைத்து அந்தப் பாலை ஏழைக் குழந்தைகளுக்கு கொடுக்கப்போவதாக அந்த பேக்கரியின் உரிமையாளார் தெரிவித்துள்ளார்.
மூன்று சமையற் கலைஞர்களால் ஒரு வார காலத்தில் இந்த விநாயகர் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.